சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ஜோ ரூட் தங்களை பொருத்தவரை சத்தீஸ்வர் புஜாராதான் இந்திய அணியின் மிகப்பெரிய விக்கெட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் பேட்டிங்கை செல்போனில் பார்த்து வியந்தேன் புகழ்ந்து தள்ளிய கோலி! புஜாராவை போல மனவலிமையுடன விளையாட இங்கிலாந்து அணி வீரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிங் புஜாரா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் சிறப்பாக மற்றும் நிலையாக விளையாடி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் டெஸ்ட் கிங் சத்தீஸ்வர் புஜாரா. அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு கைகொடுத்து விளையாடினாலும் 3 அரைசதங்களை அடித்துள்ளார் புஜாரா. ஆனால் 900 பந்துகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இந்திய அணி சாதனை தேவையான இடங்களில் பொறுமையாக விளையாடி நிலையான ஆட்டத்தை பதிவு செய்ததுடன் விக்கெட் விழாமல் இந்திய அணியை பாதுகாத்து விளையாடினார் புஜாரா. இதன்மூலம் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனையுடன் இந்தியா திரும்பியுள்ளது.
புஜாரா குறித்து ஜோ ரூட் இந்நிலையில் இங்கிலாந்து அணியை பொருத்தவரை இந்தியாவின் சத்தீஸ்வர் புஜாரா மிகப்பெரிய விக்கெட் என்று அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். நாளைய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை முன்னிட்டு செய்தியாளகளிடம் பேசிய அவர் புஜாரா அற்புதமான வீரர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
வீரர்கள் பின்பற்ற வேண்டும்
புஜாராவை போல மைதானத்தில் மனவலிமையுடன் விளையாட தங்களுடைய அணி வீரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். புஜாராவுடன் இணைந்து விளையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரூட், புஜாராவிடமிருந்து பேட்டிங்கையும் கிரிக்கெட் மீதான அவரது காதலையும் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.