சென்னையில் நாளை வருணபகவானுக்கு வேலை இல்லை… ஆக சேப்பாக்கில் களைகட்டப் போகும் ஆட்டம்!

0
230

சென்னை: இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாளை தொடங்க உள்ள நிலையில் வானிலையை பொறுத்தவரையில் சென்னையில் நாளை மழைக்கான அறிகுறி இல்லை என்பது தெரிகிறது. நாளை காலை ஆட்டத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கும். பின்னர் 30 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

 நாளை தொடங்குகிறது இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி இலங்கையை 2-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு சென்னை வந்துள்ளது. இந்தியாவுக்கு உள்ளூர் சூழ்நிலை சாதகமாக உள்ளது. தரமான ஸ்பின்னர்கள் இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

தரமான வீரர்கள் உள்ளனர் இங்கிலாந்து அணியும் சளைத்தவை அல்ல. அங்கும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். இங்கிலாந்தும் 2 ஸ்பின்னர்கள் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளது. பாஸ்ட் பவுலிங்கும் அங்கும் தரமாக உள்ளது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கேப்டன் ஜோ ரூட் ஆகியோரை அந்த அணி அதிகம் நம்பியுள்ளது. இதில் யார் மாஸ் காட்டுவார்கள் என்பது நாளை முதல் தெரியும்.

சென்னை வானிலை எப்படி? நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் அதுவும் சென்னையில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் வானிலையை பொறுத்தவரையில் சென்னையில் மழைக்கான அறிகுறி இல்லை
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here