சென்னை : இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஒன்று. முதலில் மார்ச் 26 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயம் என்பதால் முடிவை மாற்றிய படக்குழு, ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க முடிவு செய்தது. ஆனால் விரைவில் படம் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது ரிலீஸ் தேதியை முடிவு செய்து, அதனையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தயாரிப்பு நிறுவனம் இந்த தகவலை பகிர்ந்துள்ளது.
அதில், டாக்டர் ரசிகர்கள் அனைவருக்காகவும் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம். மற்றொரு முக்கியமான நாளில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி டாக்டர் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளோம். தேர்தல் சமயம் என்பதால் அனைவரும் நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.