வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் பேட்டிங்கை செல்போனில் பார்த்து வியந்தேன் புகழ்ந்து தள்ளிய கோலி!

0
6734

சென்னை: இங்கிலாந்து தொடர் முழுவதும் நன்றாக செயல்படுவது மிகவும் முக்கியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இப்போது சிந்திக்கவில்லை. இந்த தொடரில் கவனம் செலுத்துவதுதான் இப்போது முக்கியம் என்றும் விராட் கோலி கூறினார். பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் ஆட்டத்தை தன்னுடைய செல்போனில் பார்த்ததாகவும் விராட் கோலி தெரிவித்தார்.

பெரும் எதிர்பார்ப்பு இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி இலங்கையை 2-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு இந்தியா வந்துள்ளது. இந்தியாவுக்கு உள்ளூர் சூழ்நிலை சாதகமாக உள்ளது. தரமான ஸ்பின்னர்கள் இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

வாஷிங்டன் சுந்தரின் பிரமாதமான ஆட்டம் பல மாதங்கள் தொலைவில் உள்ள ஒன்றைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை. இந்த தொடரில் கவனம் செலுத்துவதுதான் இப்போது முக்கியம். ஒரு தந்தையாக மாறுவது எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தருணம். இதை ஒரு தொடர் வெற்றியுடன் ஒப்பிட முடியாது. ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரில் நான் இல்லாவிட்டாலும் அணியுடனான எனது தொடர்பு நீங்காது. நாங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளோம். பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் பிரமாதமான ஆட்டத்தை என்னுடைய செல்போனில் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் என்று விராட் கோலி கூறினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here