3வது இடத்திற்கு போட்டியிடும் இரண்டு அணிகள்… வெற்றி யாருக்கு…

0
241

வாஸ்கோடகாமா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 82வது போட்டி கோவாவின் வாஸ்கோடகாமாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் முதல் பாதியில் உள்ள நிலையில் இன்றைய போட்டியின்மூலம் 3வது இடத்திற்கு தாவ முனைப்பு காட்டுகின்றன.

82வது போட்டி ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 82வது போட்டி கோவாவின் வாஸ்கோடகாமாவில் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ள எப்சி கோவா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதவுள்ளன.

3வது இடத்திற்கு போட்டி இரு அணிகளும் முறையே 14 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகள் மற்றும் 6 டிராக்களுடன் சமமான நிலையில் உள்ளன. ஆயினும் கோல் கணக்கில் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ள நிலையில், இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் 3வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு காணப்படுகிறது.

3வது இடத்தில் ஐதராபாத் அணி 15 போட்டிகளில் விளையாடி 22 புள்ளிகளுடன் உள்ள நிலையில், கோவா மற்றும் நார்த்ஈஸ்ட் அணிகள் 14 போட்டிகளில் விளையாடி 21 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக 3வது இடத்திற்கு தாவும்.

ப்ளே-ஆப் சுற்றிற்கு போட்டி இரு அணிகளும் இந்த தொடரில் வலிமையுடன் விளையாடி வருகின்றன. இதன்மூலம் ப்ளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பும் இரு அணிகளுக்கும் காணப்படுகிறது. இதனிடையே இன்றிரவு 7.30 மணிக்கு திலக் மைதானத்தில் துவங்கவுள்ள இந்த போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி அல்லது ஜியோ டிவியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here